ஹைதராபாத்: அனைத்து பணியாளர்களுக்கும், ஓய்வு வயது என்பது கட்டாயமான நிகழ்வு ஆகும். பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை உள்ளவர்களுக்கு, ஓய்வு வாழ்க்கை என்பது எப்போதும் நிம்மதியாகவே இருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களோ, ஓய்வு வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமல் உள்ளனர். இதன் காரணமாக, அவர்கள் ஓய்வு வயதில், நிதிச்சுமைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. முதலீடுகள் உடனான ஓய்வூதிய நிதியை உருவாக்கவும் மற்றும் பாதுகாப்பான வருமானத்தைப் பெறவும், நிரந்தர வைப்பு நிதி முறையே சாலச் சிறந்த முறையாகும்.
முதலீட்டிற்கான பாதுகாப்பு, வருமானத்திற்கான உத்தரவாதம், நமக்குச் சாதகமான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தன்மை உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை, நிரந்தர வைப்பு நிதி (fixed deposits) தன்னகத்தே கொண்டு உள்ளன. நமக்குப் பணம் தேவைப்படும் போது, உடனடியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை இதன் சிறப்பம்சம் ஆகும். ஆனால், இதனை, மற்ற நிதித் திட்டங்களுடன், ஒருங்கிணைக்க முடியாது. வங்கிகள், சமீபகாலமாக, நிரந்தர வைப்பு நிதி (fixed deposits) விகிதங்களை உயர்த்தி வருகின்றன. சில வங்கிகள், நிரந்தர வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 8.5 முதல் 9 சதவீதம் வரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் உள்ள இந்தச் சூழலில், நிரந்தர வைப்பு நிதி (fixed deposits) முறையைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டு உள்ள ஓய்வூதியதாரர்கள்,. மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு விரிவாகக் காண்போம்...
சரியான இடம்
நிரந்தர வைப்பு நிதி (fixed deposits) திட்டங்களை, வங்கிகள், சிறிய அளவிலான நிதி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள், வேறுபட்ட வட்டி விகிதங்களில் வழங்கி வருகின்றன. தேசிய வங்கிகளை ஒப்பிடும் போது, சில சிறு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகள், அதிக அளவில் வட்டி அளித்து வருகின்றன. மற்ற சில கார்ப்பரேட் நிறுவனங்கள், மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கு, கிட்டத்தட்ட 9 சதவீதம் வரை வட்டி வழங்கி வருகின்றது.
சிறு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிச் சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்வதற்கு முன், CRISIL மற்றும் ICRA போன்ற தரமதிப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும், மதிப்பீடுகளைச் சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும். சந்தையின் நம்பகத்தன்மை, கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வழங்குபவரின் பின்னணி ஆகியவற்றைப் பார்த்து, இந்த விவகாரத்தில், முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கிகளைத் தவிர்த்து, வங்கி சாரா நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் டெபாசிட் செய்யும் போது, அதிக ரேட்டிங் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
உங்களுக்கு எப்போது வட்டி தேவை?
நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள், திரள் (cumulative)மற்றும் திரள் அல்லாதது (non-cumulative) என இரு வகையாகப் பிரிக்கலாம். திரள் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில், வட்டியானது, ஆண்டுதோறும், அசல் தொகை மீது கட்டப்பட்டு வருகிறது. திட்டம் முடிவடைந்த பிறகு, அசல் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. வட்டி விகிதமானது, மாதம், காலாண்டு, 6 மாதங்கள் மற்றும் ஆண்டிற்கு ஒருமுறை என கணக்கிடப்பட்டு, திரள் அல்லாத நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திரள் வகையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டம், நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து உள்ளதால், ஓய்வூதிய நிதியை உருவாக்க விரும்புபவர்கள், இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.
கவனமாக தெரிவு செய்யவும்...
பிக்சட் டெபாசிட்கள், குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும் தன்மை கொண்டது ஆகும். முன்கூட்டியே, பணப்பலனைப் பெற விரும்பினால், சில இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே, பிக்ஸட் வைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தொலைநோக்கௌ பார்வை உடன் செயல்படுவது அவசியம் ஆகும். ஒரே நேரத்தில், அனைத்து பிக்ஸட் டெபாசிட்களை மேற்கொள்ளக் கூடாது. வெவ்வேறு சூழ்நிலைகளில் எழும் உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கான நேரங்களை நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.இது உங்களுக்குப் பண நெருக்கடி நேரத்தில், எவ்வித இழப்பும் இல்லாமல், மிகுந்த பலன் அளிப்பதாக உள்ளது.
கூடுதல் வட்டி பெற விரும்புகிறீர்களா?
சில நேரங்களில் நாம் மேற்கொண்டுள்ள பிக்ஸட் டெபாசிட், குறைந்த வட்டியை அளிப்பதாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிக்ஸட் டெபாசிட்டை ரத்து செய்ய வேண்டும் மற்றும் புதிய பிக்ஸட் டெபாசிட் மேற்கொள்ள வேண்டும். இதனால் வட்டி இழப்பைத் தவிர்க்க முடியும். உதாரணமாக, நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து வருடங்கள் கால அளவிற்கு டெபாசிட் செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நடைமுறையிலிருந்த வட்டி விகிதங்களின்படி, அது 5.50 சதவீதத்திற்கு மேல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தற்போது வங்கிகள் மூன்று ஆண்டுகளுக்கு 7-7.5 சதவீதம் வரை வட்டி தருகின்றன. எனவே, அந்த வைப்புத்தொகையை ரத்து செய்துவிட்டு புதிதாக பிக்ஸட் டெபாசிட் துவங்க வேண்டும்.
நீங்கள் அதை முன்கூட்டியே எடுக்க திட்டமிட்டு இருந்தால்...
பிக்ஸட் டெபாசிட்கள், கால அளவை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால், பலர் அதனை நம்பகமான முதலீடாகக் கருதுகின்றனர். டெபாசிட் முதிர்வுக்கு முன் முதலீட்டைத் திரும்பப் பெற விரும்பினால், அதனை வைத்து கடன் பெற முயற்சி செய்யலாம். இது டெபாசிட் தொகை மீதான பண இழப்புகளைத் தவிர்க்க உதவும்.
வரி விதிப்பிற்கு உட்படுவீர்கள்...
பிக்ஸட் டெபாசிட்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு, அதற்குப் பொருத்தமான பிரிவுகளின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஒரு நிதியாண்டின் வட்டி வருமானம், ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் ( மூத்த குடிமக்களுக்கு ரூ. 50 ஆயிரம்) இருந்தால், வங்கிகள், அவர்களின் அசல் தொகையிலிருந்து, வரியைக் கழிப்பது இல்லை. அதிக வட்டி பெற வாய்ப்பு உள்ளவர்கள் படிவம் 15G மற்றும் படிவம் 15H (மூத்த குடிமக்கள்) ஆகியவற்றைப் பூர்த்தி செய்து, வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம், அசல் தொகையிலிருந்து, வரி பிடித்தம் செய்வதைத் தவிர்க்க முடியும்.
ஆன்லைனிலும் முதலீடு செய்யலாம்...
வங்கி மொபைல் செயலிகளின் மூலமாகவே, எளிதாக பிக்ஸட் டெபாசிட்களை செய்ய வழிவகை உள்ளதால், இனி அதற்காக, வங்கி செல்ல வேண்டிய அவசியமில்லை. கார்ப்பரேட் பிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் மாற்ற முடியாத கடன் பத்திரங்களையும், டிமேட் கணக்கின் உதவியுடன் செய்ய முடியும்.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் அரசியல் பேச்சு - தளபதி தலைவர் ஆவாரா..?