ETV Bharat / business

தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகள் என்றால் என்ன..? அதனால் என்ன பயன்கள்..? - மருத்துவக்காப்பீடுகளில் நன்மைகள் என்ன

தீவிர நோய் பாதிப்புகளால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க "தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகள்" உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுகுறித்து முழுத்தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

Critical care health policies rescue families from financial ruin

author img

By

Published : Nov 16, 2022, 1:16 PM IST

Updated : Nov 28, 2022, 4:01 PM IST

ஹைதராபாத்: தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகள் என்பது சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மாரடைப்பு, உறுப்பு மாற்று மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை, பக்க வாதம் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான உகந்த பாலிசிகளாகும். இந்த பாலிசிகள் மூலம் சந்தாதாரர்கள் தீவிர நோய்களால் பாதிக்கப்படும்போது மருத்துவ சிகிச்சைக்கான செலவை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்கும். இது மற்ற மருத்துவக் காப்பீடுகள் போலவே தோன்றலாம். ஆனால், தீவிர நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த நேரத்தில் தீவிர நோய் மருத்துவக் காப்பீடுகளே அதிக மதிப்பு மிக்கதாகவும், உங்களது குடும்பத்தாருக்கு பக்க பலமாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணிபுரியும் ராஜீவ் என்பவர் மன அழுத்தம் காரணமாக புகைபிடிக்க ஆரம்பிக்கிறார். நாளடைவில் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகிறார். ஒருநாள் மயங்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், உடலின் இடது பக்கம் செயலிழந்துவிடுகிறது. இதனிடையே மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்காக தனது நிறுவனம் மூலம் பெற்ற மருத்துவக்காப்பீடு தொகையை முழுவதும் பயன்படுத்திவிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு தொடர்ந்து மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. மறுப்புறம், அவரால் வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்த காரணிகள் அவரது குடும்பத்தை நிதி சிக்கல்களில் தள்ளிவிடுகிறது. இப்படி பல தீவிர நோய்கள் மூலம் குடும்பமே நிதி சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம். அவற்றை தவிர்க்க தீவிர நோய் காப்பீடுகளை பயன்படுத்தலாம். பொதுவான மருத்துவக்காப்பீடு கொள்கைகளின் கீழ் குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சம் கிடைக்கும். இதிலும் சந்தாதாரர் சதவீதம், காப்பீட்டு நிறுவனங்கள் சதவீதம் என்று பல்வேறு வகைகள் உள்ளன. இந்த பாலிசிகளின் கீழ் 100 சதவீதத்தை கோரினாலும் தீவிர நோய் பாதிப்புகளுக்கு அது போதுமானதாக இருக்காது. அதுவே தீவிர நோய் காப்பீடுகள் மூலம் சந்தாதாரர் 400 சதவீத கூட்டு தொகையை பெற்றுவிட முடியும். இந்த இழப்பீடு பெரும் நிதி உதவியாக இருக்கும்.

ஆனால், இந்த காப்பீடுகள் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. அதாவது மதுபோதை மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடைமையாக இருப்பவர்களுக்கும், ஏற்கனவே தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படாது. ஆரோக்கியமான உடல் நிலையிலிருந்து திடீரென தீவிர நோய்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கே இது பொருந்தும். அதேவேளையில், இந்த காப்பீடுகள் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. அவற்றையெல்லாம் பரிசீலனை செய்தபின்பே காப்பீடுகளை எடுக்கலாம்.

இதையும் படிங்க: முன்கூட்டிய ரிடையர்மென்ட்; தீர்வுகள் என்ன? - வல்லுநர் ஆலோசனை

Last Updated : Nov 28, 2022, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.