ETV Bharat / business

நேரடி வரி வீழ்ச்சி என்பது தற்காலிகமானது: நிதியமைச்சகம் - மத்திய நிதியமைச்சகம்

நேரடி வரி வசூல் வீழ்ச்சி தற்காலிகமானது என்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகளின் பலன் விரைவில் கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tax
Tax
author img

By

Published : Jun 7, 2020, 7:07 PM IST

Updated : Jun 7, 2020, 7:18 PM IST

டெல்லி: சமீபத்திய வரிச் சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், நேரடி வரி வசூல் வீழ்ச்சி மற்றும் நாட்டில் முதலீட்டு விகிதம் குறைந்து வருவது குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி வசூல் வீழ்ச்சி தற்காலிகமானது என்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகளின் பலன் விரைவில் கிடைக்கும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நேரடி வரி வசூலின் மதிப்பு எதிர்மறையாகிவிட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால் இது சரியான தரவுகளை கொண்டு ஆராயப்பட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் நினைவில்லை என்று கூறும் மத்திய நிதி அமைச்சகம், நேரடி வரி வசூல் குறைந்தாலும் அரசின் புதிய சீர்திருத்த நடவடிக்கைகளால் விரைவில் இது சரிசெய்யப்பட்டு மீண்டெழும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் நிகர வரி வருவாயானது 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.94 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது மாநிலங்களின் பங்கினை சேர்க்காத அளவாகும்.

2010ஆம் நிதியாண்டின்போது நிகர வரி வருவாயின் வளர்ச்சியானது 3.63 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதுவே, உலக பொருளாதாரம் சுணக்க நிலையை அடைந்திருந்த 2009 நிதியாண்டில் 1.86 விழுக்காட்டுக்கு வீழ்ந்திருந்தது. இந்த இரு ஆண்டுகள் தவிர இதர ஆண்டுகளில் மொத்த மற்றும் நிகர வரி வசூல் வளா்ச்சியானது குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், வரி வருவாய் வளர்ச்சியானது ஒற்றை இலக்க அளவுக்கு வீழ்ச்சியடைவது இது மூன்றாவது முறையாகும். 2016, 2019 நிதியாண்டுகளில் நிகர வரி வருவாய் வளர்ச்சியானது முறையே 4.4 விழுக்காடாகவும், 6 விழுக்காடாகவும் இருந்தது. நிகர வரி வருவாய் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பட்சத்தில் தான் அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக அரசால் தாராளமாக செலவிட இயலும்.

தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட தகவலின்படி, 2020 நிதியாண்டுக்கான நிகர வரி வசூலானது ரூ.13 லட்சம் கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் இது ரூ. 15 லட்சம் கோடியாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.

2020 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டின்படி, மொத்த வரி வசூலானது வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றின் வசூலையும் சோ்த்து ரூ. 21 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களின் பங்கு ரூ.6.5 லட்சம் கோடியாக உள்ளது. ஒருவேளை மாநிலங்களின் பங்கினை சோ்க்கும் பட்சத்தில் மொத்த வரி வருவாயில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையானது, மதிப்பீடு செய்யப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும்.

பொதுமுடக்கம் காரணமாக பொருளாதாரம் மீண்டெழுவது தாமதமாவதால் வரி வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021 நிதியாண்டுக்கான நிகர வரி வசூல் மேலும் குறையும் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வரி வசூல் பற்றாக்குறை ரூ. 4.12 லட்சம் கோடியாக இருக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கியின் சமீபத்திய மதிப்பீடு தெரிவிக்கிறது.

2021 நிதியாண்டில் வரி வசூல் வளர்ச்சியானது 8.7 விழுக்காடாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. தற்போதைய வரி வசூல் மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டில் வரி வசூல் வளர்ச்சி விகிதம் 20 விழுக்காட்டுக்கும் குறைவில்லாத வகையில் இருந்தால் மட்டுமே மத்திய அரசின் அந்த மதிப்பீடு சாத்தியமாகும். எனினும், 20 விழுக்காடு வரி வசூல் வளர்ச்சியை எட்டுவது மிகக் கடினமானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Last Updated : Jun 7, 2020, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.