ETV Bharat / business

ஃபின்டெக்கின் அதிக வட்டி தரும் வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்யப்போகிறீர்களா? - அலெர்ட்டாக இருங்கள்! - ஆபத்து

ஃபின்டெக் நிறுவனங்களின் அதிக வட்டி தரும் வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்வது, உங்களது பணத்தை பணயம் வைப்பதற்கு சமம் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

Beware
Beware
author img

By

Published : Oct 6, 2022, 10:01 PM IST

ஹைதராபாத்: பொதுவாக தங்களது சேமிப்பைக் குறிப்பிட்ட நிதித்திட்டத்தில் முதலீடு செய்யும் மக்கள், தங்கள் முதலீட்டிற்கான பாதுகாப்பையும், உறுதியான வருமானத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் பலர் வங்கி சேமிப்பு மற்றும் தபால் நிலையங்களின் வைப்புத் திட்டம் போன்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை விரும்புகிறார்கள்.

இதில் சிலர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து புதிய திட்டங்களை நோக்கிச் செல்கிறார்கள். அதே நேரத்தில் வைப்புத் தொகையை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எண்ணுகிறார்கள். இந்த புதுமை விரும்பிகளைத்தான் ஃபின்டெக் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இவை புதிய சேமிப்புத் திட்டங்களையும், தொழில்நுட்ப முறைகளையும் பயன்படுத்துகின்றன.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), வங்கிகளில் வைக்கப்படும் நிரந்தர வைப்புத் தொகைக்கு மாற்றான திட்டங்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, சில நிதி நிறுவனங்கள் வீடு மற்றும் வாகனக் கடன்களை 14 முதல் 15 விழுக்காடு வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. அதே நேரத்தில், அந்நிறுவனங்கள் வைப்புநிதி வைத்திருப்பவர்களுக்கு 12 முதல் 13 விழுக்காடு வட்டி செலுத்துவதாக உறுதியளிக்கிறார்கள். இது நடைமுறை சாத்தியமற்றது. அத்தகைய நிறுவனங்களில், வைப்புநிதிக்கு அதிக ஆபத்து இருக்கலாம்.

இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வைப்புத் தொகை உள்ளவர்களுக்கும், கடன் பெறுபவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படுகின்றன என்பதை உணர வேண்டும். நிரந்தர வைப்பு நிதி வைத்திருப்பவர்களின் பணத்திலிருந்தே கடன் வழங்கப்படுகிறது.

இதனால், நிறுவனம் மூடப்பட்டால், வைப்பு நிதி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணத்தை முற்றிலும் இழக்க நேரிடும். இந்த நிறுவனங்களில் இருந்து யாருக்கு கடன் கொடுக்கப்பட்டது? ஏற்கெனவே எவ்வளவு கடன் தொகை வசூலிக்கப்பட்டது? வட்டிக்கு என்ன ஆனது? என்ற எந்த விவரங்களையும் யாராலும் தெரிவிக்க முடியாது.

வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகை கணக்கை தொடங்குவது பற்றி பெரும்பாலும் நமக்கு அதிகம் தெரிவது இல்லை. நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச்சென்றால், அங்குள்ள ஊழியர்கள் நிரந்தர வைப்புத் தொகை கணக்கை திறக்க உதவுவார்கள். ஆனால், இந்த நடைமுறை ஃபின்டெக் நிறுவனங்களில் முற்றிலும் வேறாக இருக்கும். கடன் பெறுபவருக்கும் ஃபின்டெக் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த சிக்கலான செயல்முறையை புரிந்துகொள்வது சற்று கடினம்.

கடன் வழங்குபவர்களையும் கடன் பெறுபவர்களையும் இணைப்பதில் என்பிஎப்சிக்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அவை சில விதிமுறைகள் மற்றும் வரம்புகளின் அடிப்படையில் கடன் பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இந்த நிறுவனங்கள் கடன்களைக்கொடுக்கும் முன்பு வங்கிகள் செய்யும் அளவுக்கு கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

அதனால், கடனை வசூலிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தந்திரமான அம்சம் என்னவென்றால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கடன்கள் திரும்பப் பெறப்படாவிட்டால், அதற்கு நிதி நிறுவனம் பொறுப்பேற்காது என்று ஒப்பந்தத்திலேயே ஒரு ஷரத்து இருக்கும்.

எனவே, ஏதேனும் தவறு நடந்தால் இறுதியில் இழப்பு முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்குத்தான். அதனால் சட்டப்பூர்வ பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். சில நிறுவனங்கள், உங்களின் அனைத்து முதலீட்டிற்கும் ஒப்பந்தங்களே அடிப்படை என்று தெளிவாகக் கூறுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பணத்தை திரும்பப் பெற சட்டப் போராட்டம் நடத்துவது கடினம்.

இந்த நாட்களில் பல நிறுவனங்கள் அதிக வட்டி வழங்குகின்றன. இதனால், பலர் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதுபோல அதிகளவு வட்டிக்கு ஆசைப்பட்டு செல்லும்போது, முன்கூட்டியே நன்கு ஆராய வேண்டும். இல்லையென்றால் உழைத்து சம்பாதித்த பணத்தை எந்தவிதப் பாதுகாப்பும் இன்றி பணயம் வைக்கும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: சிக்கல்கள் இல்லாமல் வீட்டுக்கடன், வாகனக்கடன் பெறுவது எப்படி?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.