மும்பை: நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (APSEZ), 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒருங்கிணைந்த நிகர லாபம் 16.86 விழுக்காடு சரிந்து, தற்போது ரூ.1,091.56 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,312.9 கோடியை ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவித்திருந்தது. மேலும், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 5,073 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 5,099.25 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், மொத்த செலவுகளும் ரூ.3,660.28 கோடியிலிருந்து தற்போது, ரூ.4,174.24 கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இயங்கும் அதானி குழுமத்தில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப்பொருளாதார மண்டலமும் ஒரு அங்கமாகும்.
இது நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா துறைமுகம் உள்பட 12 துறைமுகங்களில் சரக்குகளை கையாள்வதில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு - ட்விட்டரை நம்ப மறுக்கிறார்களா பயனாளர்கள்...?