ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் அனில் அம்பானி, சாயா விரணி (Chhaya Virani), ரைனா கரணி (Ryna Karani), மஞ்சரி கக்கர் (Manjari Kacker), சுரேஷ் ரங்காச்சர் (Suresh Rangachar) உள்ளிட்ட இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் கடும் சரிவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் 0.65 எனவும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸில் 0.61 எனவும் வர்த்தகமாகி வருகிறது.
இது கடந்த 52 வாரங்களில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சியாகும்.
இதையும் படிங்க: இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் அம்பானி!