ETV Bharat / business

இனி பங்குச்சந்தைக்கு ஏறுமுகம்தான்...! - நிபுணர் அருள் ராஜ் சிறப்புப் பேட்டி - Stock market will rise in the coming days

சென்னை: இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படும் என பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜ் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

stock market
author img

By

Published : Sep 21, 2019, 1:26 PM IST

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, கடந்த சில வாரங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

முன்னதாக, ஆட்டோமொபைல் துறை, கட்டுமானத் துறை, ஏற்றுமதி உள்ளிட்டவற்றை ஊக்குவித்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் கோவாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வைத்துவந்த கோரிக்கை இது. காலை முதல் சரிவைச் சந்தித்துவந்த பங்குச்சந்தை மத்திய அரசு அறிவிப்பால் எழுச்சிப் பெறத் தொடங்கியது.

இதன் விளைவாக, நேற்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதாவது 5.32 விழுக்காடு உயர்வு கண்டது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதாவது 5.32 விழுக்காடு உயர்ந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய மாற்றம் என்கிறார் பங்குச்சந்தை நிபுணர் அருள் ராஜன்.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளால் பொருளாதாரம் ஊக்கம் பெறும் என முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணம் தோன்றியதால் பங்குகளின் விலை உயர்ந்தது.

அதேபோல், நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் அதிகரித்து அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் ஈவுத்தொகை அதிகரிக்கும். இதன் காரணமாகவே, பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவிவந்தது. அண்மையில் இந்திய பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சி அடைந்தது.

நேற்றைய வர்த்தக நேர தொடக்கத்திலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு எழுச்சிப் பெற்றது. அடுத்துவரும் நாட்களிலும் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படும். ஒருவேளை இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருந்தால் பங்குச்சந்தை மேலும் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், அமெரிக்காவிலிருந்து புதிய முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்.

Intro:
சென்னை:
அடுத்து வரும் நாட்களிலும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்Body:

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஆட்டோமொபைல் துறை, கட்டுமானத் துறை மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவற்றை ஊக்குவித்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்தவகையில் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் கோவாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டார். கார்ப்ரேட் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வைத்து வந்த கோரிக்கையை இது. காலையில் வர்த்தக நேர தொடக்கத்தில்
சரிவுடன் வர்த்தகம் நடந்து வந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு பங்குச் சந்தைகள் எழுச்சி பெறத் தொடங்கின. நேற்றைய வர்த்தக
நேர முடிவில் மும்பை
பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதாவது 5.32 சதவிகிதம் உயர்வு கண்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் அதாவது 5.32 சதவிகிதம் உயர்வு கண்டது. தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஏற்றம் என்கிறார்
பங்குச் சந்தை நிபுணர் அருள் ராஜன்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய
அவர்,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளால்
பொருளாதாரம் ஊக்கம் பெறும் என முதலீட்டாளர்கள் மத்தியில் எண்ணம் தோன்றியதால் பங்குகளின் விலை உயர்ந்தது என்றார். அதேபோல் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் அதிகரித்து அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் ஈவுத்தொகை அதிகரிக்கும்
என்பதால் பங்குச்சந்தையில் முதலீடுகள்
அதிகரித்து உள்ளதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. அண்மையில் இந்திய பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்தனர்.
நேற்றைய
வர்த்தகநேர தொடக்கத்திலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம் ஆகி வந்தது இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பிறகு எழுச்சி பெற்றது. ஒருவேளை இது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருந்தால்
பங்குச்சந்தை மேலும் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கும் என்று அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால்
அமெரிக்காவிலிருந்து புதிய முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.