மும்பை: முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்க விருப்பம் தெரிவித்ததால் இந்திய பங்கு சந்தை இன்று சரிவைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் குறைந்து 49,744ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகளை இழந்து 14,675ஆக இருந்தது.
வேதாந்தா, ஜூப்ளியண்ட் ஃபுட்ஸ், டொரண்ட் பவர், அமரா ராஜா பேட்டரி, அதானி போர்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. பி.வி.ஆர், கோத்ரேஜ் ப்ராப், எம் & எம், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபின், டாக்டர் ரெட்டிஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
இச்சூழலில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்வுடன் ரூ.72.49ஆக இருந்தது.