ETV Bharat / business

ஏற்றம்  கண்ட இந்திய பங்குச் சந்தை - ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு காரணமா?

மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு உதவும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

stock market
stock market
author img

By

Published : Apr 27, 2020, 7:43 PM IST

Updated : Apr 28, 2020, 4:44 PM IST

இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தைச் சந்தித்து வந்தது. ஒருகட்டத்தில் 700 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 415.86 புள்ளிகள்(1.33 விழுக்காடு) உயர்ந்து; 31,743.08 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 127.9 (1.40) புள்ளிகள் உயர்ந்து, 9,282.30 புள்ளிகளில் நிறைவடைந்தது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இன்டஸ்இண்ட் வங்கி ஆறு விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. அதைத்தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஐந்து விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மறுபுறம் என்.டி.பி.சி., எம்&எம், எச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன.

காரணம் என்ன?

மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க புதிய கொள்கைகள் அறிவிக்கப்படும் என்று ஜப்பான் மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதேபோல மற்ற ஆசிய நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் திட்டங்களை அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதியதால், இன்று ஏற்றத்துடன் இந்திய பங்குச் சந்தை தொடங்கியதாக, துறை சார்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு உதவும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பும் இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காண உதவியது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசாக்கள் உயர்ந்து 76.25 ரூபாய்க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சர்வதேச பங்குச் சந்தை

ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய சர்வதேச பங்குச் சந்தை ஏற்றத்தில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதேபோல ஐரோப்பியப் பங்குச் சந்தையும் தற்போது வரை ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 4.03 விழுக்காடு குறைந்து 23.81 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜியோவில் ஃபேஸ்புக் முதலீடு செய்ய உண்மையான காரணம் இதுதானா?

Last Updated : Apr 28, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.