ETV Bharat / business

வர்த்தக நிலவரம்: மீண்டும் சிறப்பான உயர்வைக் கண்ட இந்திய சந்தைகள் - சென்செக்ஸ் நிலவரம்

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன.

Sensex
Sensex
author img

By

Published : Dec 23, 2020, 6:18 PM IST

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிச.23) சுமார் 437.49 (0.95 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 46,444.18 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 134.80 (ஒரு விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 13,601.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனப் பங்குகள் சுமார் 3 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், ஐடிசி, ஸ்டேட் வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை டைடான், பவர் கிரிட், என்டிபிசி ஆகியவை சரிவைக் கண்டன. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 முடக்கம் அமலுக்கு வருவதால் சந்தைகளில் சுணக்கம் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றத்தை சந்தித்துவருவது வர்த்தகர்கள் இடையே நம்பிக்கையைத் தந்துள்ளது.

இதையும் படிங்க: ஜனவரி முதல் கார் விலை உயர்கிறது: நிசான் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.