வாரத்தின் முதல் நாளான இன்று (ஜன 4) மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 307.82 (0.64 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 48,176.80 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 114.40 (0.82 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,147.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். டெக், டெக் மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை கோடாக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டான், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான ஒப்புதல் கிடைத்துள்ள வர்த்தகர்களிடையே நம்பிக்கை அதிகரித்து சந்தை உயர்வைக் கண்டன என தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: விற்பனையில் 17.5% உயர்வைக் கண்ட டிவிஎஸ்!