இந்திய பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், அதன் அச்சம் இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்துவருகிறது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து 26 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தமாகிவருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
கோவிட்-19 வைரஸ் தாக்கம் உலக சந்தைகளை கடுமையாக பாதித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் கடுமையாக முடங்கியுள்ள நிலையில் உலக பங்குச் சந்தைகள் கடந்த ஒரு வாரமாக கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன.
இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துவருகிறது. இந்த வாரத்தின் தொடக்த்திலிருந்தே தொடர்சியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துவருவதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: சரிவின் பாதையில் இந்திய பங்குச் சந்தைகள்