ETV Bharat / business

தடுப்பு மருந்து முடிவுகள் எதிரொலி: கிடுகிடுவென உயர்ந்த ஃபைஸர் நிறுவன பங்குகள் - ஃபைஸர் நிறுவன பங்குகள்

மும்பை: ஃபைஸர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாக வெளியான தகவலையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது.

Pfizer share
Pfizer share
author img

By

Published : Nov 19, 2020, 8:15 PM IST

கரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரும் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் 10 நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் இடைக்கால முடிவுகளில் தடுப்புமருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஃபைஸர் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது. ஒருகட்டத்தில் நான்கு விழுக்காடு வரை ஏற்றம்கண்டு 5,250 ரூபாய்க்கு வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடியும் சமயத்தில் சுமார் மூன்று விழுக்காடு உயர்ந்து ரூ.5059-க்கு அந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமானது.

சமீபத்திய கணிப்புகளின்படி, 2020ஆம் ஆண்டில் ஃபைஸர் நிறுவனம் ஐந்து கோடி தடுப்பு மருந்துகளையும் 2021ஆம் ஆண்டில் 130 கோடி தடுப்பு மருந்துகளையும் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐபோன் பேட்டரி குறைபாடு: ரூ.839 கோடி செலவிடும் ஆப்பிள் நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.