டெல்லி: மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 88.28-க்கு விற்கப்படுகிறது. இது முந்தைய நாள் விலையான ரூ. 88.16 பைசாவிலிருந்து 12 பைசா அதிகமாகும். தற்போதைய ஏற்றத்தின் விகித அளவைக் கணக்கிடுகையில், பெட்ரோல் விலை விரைவில் முன்னொப்போதும் இல்லாத அளவான 100 ரூபாயை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஜிஎஸ்டி மூலம் வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
இதேபோல் டெல்லியில், பெட்ரோலின் விலை 13 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ. 81.62 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில், பெட்ரோல் விலை 83.13 ரூபாயாக இருந்தது. இது முந்தைய நாள் விலையான ரூ. 83.01ஆக இருந்ததை விட 12 பைசா அதிகமாகும்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.64 ஆக இருந்தது. இது முந்தைய விலையான ரூ .84.52ஆக இருந்ததிலிருந்து 12 பைசா அதிகரித்துள்ளது. இருப்பினும், டீசல் விலைகள் பெருநகரங்களில் ஒரே நிலையில் இருக்கின்றன.
தேசிய தலைநகரில், ஜூலை 30ஆம் தேதி டெல்லி அரசு மதிப்பு கூட்டப்பட்ட வரியை 13.25 விழுக்காடாக குறைப்பதாக அறிவித்ததிலிருந்து டீசல் விலை நிலையானதாக உள்ளது. இந்த வரி குறைப்பால் லிட்டருக்கு ரூ. 8.36 விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை 12 காசுகள் உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
டீசலின் விலை தேசிய தலைநகரில் லிட்டருக்கு ரூ .73.56 ரூபாயாகவும், மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் விலை முறையே லிட்டருக்கு ரூ .80.11, ரூ .78.86, ரூ .77.06 ஆக இருந்தது.