ஜிஎஸ்டி என்பது மறைமுக வரிகளின் ஒருங்கிணைந்ததாகும். மேலும் மாநில அரசுகளின் வருவாயின் முக்கிய ஆதாரமாகும். இது மொத்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது. ஜிஎஸ்டி வருவாயில் 70% க்கும் அதிகமானவை மாநிலங்களில் குவிந்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்று நோய் (கோவிட் -19) பாதிப்பால் பல நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தேவையை அதிகரிக்க ஆறு மாதங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அறிவிப்பு பின் இந்த விலக்கு வரிக் கடனை தடுக்கும், இது வணிகங்களுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க லாபத்தை ஏற்படுத்தாது என பல புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த ஜிஎஸ்டி விலக்கு வணிகர்களுக்கு உதவாது என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) முன்னாள் தலைவர் நஜிப் ஷா தெரிவித்துள்ளார். வணிகர்களுக்கு இது மேலும் சிரமத்தையே ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'அரசு வழங்கிய இலவச சைக்கிளில் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்' - ஈடிவி பார்த்துடன் பகிர்ந்த பிகார் சிறுமி!