மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 23.28 புள்ளிகள் உயர்ந்து (0.06 விழுக்காடு) 38,386.75 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஹெச்டிஎப்சி வங்கி, எல்அண்ட்டி, யெஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் பங்குகள் 2.36 விழுக்காடு உயர்வைக் கண்டன. ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிவடைந்தன.
சரிவை சந்தித்த நிஃப்டி
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 11.35 புள்ளிகள் சரிவடைந்து (0.10 சதவிகிதம்) குறைந்து 11,521.05 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இன்ஃபோசிஸ், ஹின்டல்கோ, விப்ரோ, மற்றும் டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் முன்னேற்றம் கண்டன. அதேவேளையில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஜீ என்டர்டெய்மென்ட், ஐஓசி பங்குகள் சரிவையை சந்தத்தன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து எழுச்சி கண்டு வந்த பங்குச் சந்தைகளில் இன்று குறிப்பிடத்தக்க உயர்வு ஏதும் காணப்படவில்லை.