கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளாவிய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால் உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இந்தத் தாக்கமானது இந்திய பங்குச் சந்தைகளிலும் ஒரு வாரமாக எதிரொலித்துவருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று (மார்ச் 16) இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 ஆயிரத்து 800 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 790 புள்ளிகளும் சரிவைச் சந்தித்தன.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கம் ஏற்றத்தை சந்தித்தது. இது பதற்றத்தில் இருந்த முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. நன்பகல் 12.30 மணி அளிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 655 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 9 ஆயிரத்து 292 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் காலக்கெடு.! பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?