இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமையை வர்த்தகமானதைவிட சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து தனது வர்த்தகத்தைத் தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 141.51 புள்ளிகள் (0.37 விழுக்காடு) அதிகரித்து, 38,182.08 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50.10 புள்ளிகள் (0.50 விழுக்காடு) உயர்ந்து 11,270.15 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக மருந்துகள் உற்பத்தி செய்யும் நிறுவனமான சிப்லா நிறுவனத்தின் பங்குகள் ஒன்பது விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல எம்&எம், எல்டி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காட்டிற்கும் மேல் சரிவடைந்தது. அதேபோல ஆசியன் பெயிண்ட்ஸ், மாருதி, BPCL, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.61 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 41.92 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகனது.
இதையும் படிங்க: டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்!