மும்பை: முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையால் இழந்த பங்குச் சந்தை இன்று (அக்டோபர் 28) பெரும் சரிவைக் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
பாரதி ஏர்டெல், யுபிஎல், மரிகோ, அதானி எண்டர்பிரைஸ், சீமென்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. வேதாந்தா, டி.எல்.எஃப், அமரா ராஜா பாட், அப்பல்லோ டயர்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 599.64 புள்ளிகள் குறைந்து, 39,922.46 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 159.80 புள்ளிகள் குறைந்து 11729.60 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் மதிப்பிழந்து ரூ.73.86 ஆக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 129 புள்ளிகள் சரிந்து 2,805 ரூபாயாக இருந்தது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 565 புள்ளிகள் குறைந்து 50,396 ரூபாயாக இருந்தது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 1,581 புள்ளிகள் குறைந்து 60,700 ரூபாயாக இருந்தது.