ETV Bharat / business

உச்சம் நோக்கி பயணிக்கும் இந்திய பங்குச்சந்தைகள் - மும்பை பங்குச்சந்தை நிலவரம்

நேற்று மந்தமான வர்த்தகத்தை மேற்கொண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சிறப்பான உயர்வு கண்டன.

Market Roundup
Market Roundup
author img

By

Published : Dec 16, 2020, 6:25 PM IST

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 403.29 புள்ளிகள் உயர்ந்து 46,666.46 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 114.85 புள்ளிகள் உயர்ந்து 13,682.70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஹிண்டால்கோ நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல பாரதி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இன்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், கெயில், என்.டி.பி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

உச்சம் நோக்கி பயணிக்கும் இந்திய பங்குச்சந்தைகள்

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 350 ரூபாய் உயர்ந்து 46,880 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1,450 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 65,500 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: மாருதி, ஃபோர்டை தொடர்ந்து விலை உயர்வை அறிவித்த மஹிந்திரா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.