மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 10) வர்த்தகமானதைவிட சுமார் 280 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தைத் தொடங்கியது.
இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்கமான மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 224.93 புள்ளிகள் (0.59 விழுக்காடு) அதிகரித்து, 38,556.27 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 52.35 புள்ளிகள் (0.46 விழுக்காடு) உயர்ந்து 11,322.50 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல இண்டஸ்இண்ட் வங்கி, ஐ.டி.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் டைட்டன், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சர்வதேச பங்குச்சந்தை
சர்வதேச அளவில் ஹாங்காங், டோக்கியோ, சியோல் பங்குச்சந்தைகள் ஏற்றத்திலும், ஷாங்காய் பங்குச்சந்தை இறக்கத்திலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.73 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 45.32 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகனது.
இதையும் படிங்க: 100 கோடி டாலர்களுக்கு அதிபதியான ஆப்பிள் சிஇஓ!