மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 140 புள்ளிகள் ஏற்றம் கண்டு இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் (0.31 விழுக்காடு) உயர்ந்து 40,685.50 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.90 புள்ளிகள் (0.28 விழுக்காடு) ஏற்றம் கண்டு 11,930.35 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை உயர்ந்தது. அதேபோல எம் & எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் அல்ட்ராசெம்கோ , ஹெச்சிஎல் டெக், யுனிலிவர், கெயில், உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
சர்வதேசப் பங்குச்சந்தை
சர்வதேச அளவில் டோக்கியோ, சியோல், ஹாங்காங் ஆகிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டும், ஷாங்காய் பங்குச்சந்தை சரிவிலும் தங்களது வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டே தற்போது வர்த்தகமாகி வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 0.35 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 42.27 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா: ஆஜராக மறுக்கும் அமேசான்