இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. இன்றைய வர்த்தக நாள் சுணக்கமாகவே காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிசம்பர் 31) வெறும் 5.11 (0.01 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 47,751.33 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 0.20 புள்ளிகள் குறைந்து 13,981.75 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
2020ஆம் ஆண்டில் சென்செக்ஸ் 15.7 விழுக்காடு லாபத்தைக் கண்டுள்ளது. அதேப்போல் நிஃப்டி 14.9 விழுக்காடு லாபம் கண்டுள்ளது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனப் பங்குகள் சுமார் 2 விழுக்காடு உயர்வைக் கண்டது. அதற்கு அடுத்தப்படியாக சன் பார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ., ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டன.
அதேவேளை, டி.சி.எஸ்., அல்ட்ரா டெக், பாரதி ஏர்டெல், கோடக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க: வணிகம் 2020 : ஒரு பார்வை