ETV Bharat / business

ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

author img

By

Published : May 11, 2020, 11:24 AM IST

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

Indian Stock Market
Indian Stock Market

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 338 புள்ளிகள் உயர்ந்து 31,980 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 9,352 புள்ளிகளிலும் தற்போது வர்த்தகம் ஆகிவருகிறது.

ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது. அதைத்தொடர்ந்து அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி, பஜாஜ் ஆட்டோ, இண்டஸ்இண்ட் வங்கி ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. மறுபறும் நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

காரணம் என்ன?

தற்போது இருக்கும் நெருக்கடி நிலையைத் தாண்டியும் பேஸ்புக், சில்வர்லேக், விஸ்டா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளதால் ரிலையன்ஸின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாலும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுவருவதாலும் இந்திய பங்குச் சந்தை உயர்ந்துள்ளதாகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,724.71 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

சர்வதேச பங்குச் சந்தை

ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் ஆகிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.16 விழுக்காடு உயர்ந்து பேரல் ஒன்று 30.61 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.

இதையும் படிங்க: மத்திய அரசின் ஊக்கத்தொகை போதாது: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.