கரோனா நோய்த்தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகள், முகக்கவசங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என மத்திய அரசு தடைவிதித்த நிலையில், சில மருத்துவப் பொருள்களை இனி ஏற்றுமதி செய்யலாம் என கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை ஏற்றுமதி தடையை மத்திய அரசு நேற்று நீக்கியுள்ளது.
பாராசிட்டமால்
பாராசிட்டமால் வலி நிவாரணம், காய்ச்சலைக் குணப்படுத்தும் மாத்திரை மருந்து ஆகும். மேலும் இது தலைவலி, சிறிய வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
தீவிரமான வலிகளைப் போக்குவதிலும் வேறு மருந்துகளுடன் இதைப் பயன்படுத்துவதுண்டு. இந்த மாத்திரை வெளிநாடுகளுக்கு அதிகம் தேவைப்படுவதால் இதன் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை 120 நாடுகளுக்கு பாராசிட்டமால், ஹைட்ரோ குளோரோகுயின் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்!