ETV Bharat / business

ஏற்றத்தை சந்திக்கும் தங்கத்தின் விலை!! - சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

டெல்லியில் இன்று 10 கிராம் தங்கம் 340 ரூபாயும் ஒரு கிலோ வெள்ளி 1,306 ரூபாயும் உயர்ந்துள்ளது.

Gold rate today
Gold rate today
author img

By

Published : Aug 17, 2020, 7:11 PM IST

கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் பெருநிறுவனங்களில் முதலீடு செய்ய தயங்கிய முதலீட்டாளரின் பார்வை தங்கம் பக்கம் திரும்பியது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துவருவதால், தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிரது.

டெல்லியில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 340 ரூபாய் உயர்ந்து 53,611 ரூபாயாக உள்ளது. முன்னதாக, நேற்று 10 கிராம் தங்கம் 53,271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்தது. நேற்று 68,514 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,306 ரூபாய் உயர்ந்து 69,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளதாக துறைசார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,954 அமெரிக்க டாலர்களுக்கும் ஒரு அவுன்ஸ் வெள்ளி 26.81 அமெரிக்க டாலர்களுக்கும் வர்த்தகமானது.

கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து பெரும்பாலான நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.