சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.224 சரிந்து, சவரனுக்கு 35ஆயிரத்து 640ஆக உள்ளது.
அதேநேரத்தின் ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் உயர்ந்து, 72 ஆயிரத்து, 600ஆக இருந்தது. தொடர்ந்து சில நாள்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வருவது, வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை, நேற்றை விலையான 4,867 ரூபாயிலிருந்து, 28 ரூபாய் குறைந்து 4,839ஆக இருந்தது. அதே வேளையில் கிராம் வெள்ளியின் விலை 72.20 ரூபாயிலிருந்து, 72.60 ரூபாயாக உயர்ந்திருந்தது.