உலக பொருளாதார மந்தநிலையால் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது. மந்தநிலை காரணமாகப் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் ஆர்வம் காட்டிவந்ததே விலையேற்றத்திற்கான காரணமாகக் கூறப்பட்டது. இதனால், சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். இருப்பினும், பொருளாதாரம் முன்னேற்றம் காணும் பட்சத்தில் தங்கம் விலை குறையவும் வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 552 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு 69 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 97 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1 சவரனுக்கு மேலும் 248 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 488 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 31 ரூபாய் சரிந்து, 4 ஆயிரத்து 61 ரூபாயாக உள்ளது.
இதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து 51 ரூபாய் 20 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,200 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 12.67 லட்சம் புதிய வேலை டிசம்பரில் உருவாக்கப்பட்டது: ESIC ஊதிய தரவு