டெல்லி: நாட்டின் பிரபலமான இணையவழி மளிகைப் பொருள்கள் விற்பனைத் தளமான பிக்பாஸ்கெட் மீது பெங்களூரு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிப்ளே என்ற நிறுவனம் அளித்துள்ள இந்தப் புகாரில், "பிக்பாஸ்கெட்டை பயன்படுத்தி, மளிகைப் பொருள்கள் வாங்கிய சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் சிலர் அவற்றை 'டார்க்' எனப்படும் இணையத்தில் வெளியிட்டதுமட்டுமின்றி, சுமார் 30 லட்ச ரூபாய்க்கு அவற்றை விற்க முயன்றுள்ளதாகவும் தெரிகிறது.
வாடிக்கையாளர்களின் பெயர், மெயில் ஐடி, கடவுச் சொல், தொலைபேசி எண்கள், பிறந்த தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக அக்டோபர் மாதமே, சிப்ளே நிறுவனம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக பிக்பாஸ்கெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க:ஆட்சியர் கேட்கிறார்: அமேசான் பரிசுக் கூப்பன் - உலாவும் சைபர் கொள்ளையர்கள்!