டெல்லி: விமான எரிபொருளின் விலை இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக 3 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது.
இதன் மூலம் கிலோ லிட்டருக்கு ரூ.1,304.25 ரூபாய் அதிகரித்து 43ஆயிரத்து 932 ரூபாய் 53 காசுகளாக இருந்தது. முன்னதாக ஜூலை 16ஆம் தேதி 1.5 விழுக்காடு, அதாவது கிலோ லிட்டருக்கு ரூ.635.47 உயர்த்தப்பட்டிருந்தது. இது இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது விலையேற்றமாகும்.
ஆனால் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு மாதங்களாக, அதாவது ஜூன் 29 முதல் தலைநகரில் பெட்ரோலின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் 80 ரூபாய் 43 காசுகளாக இருக்கிறது.
கெஜ்ரிவால் அதிரடி! டீசல் விலை லிட்டருக்கு ரூ.8.38 குறைந்தது!
பெட்ரோலை விட விலை அதிகமாக இருந்த டீசலின் மதிப்புக்கூட்டு வரியை டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கம் குறைத்ததை அடுத்து, அதன் விலை கணிசமாக குறைந்தது. ஆகஸ்ட் 1 நிலவரப்படி, தலைநகரில் டீசலில் விலை 73 ரூபாய் 56 காசுகளாக இருந்தது.