ETV Bharat / business

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது நிகழும் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் நியாயமானதா? - சிறப்புக் கட்டுரை - எண்ணெய்த் துறை

கச்சா எண்ணெயின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளபோதும், கடந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இது சாமானிய மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாமானியர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்த விலையேற்றம் குறித்து பொருளாதார அறிஞர் பி.எஸ்.எம்.ராவ் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்
பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்
author img

By

Published : Jun 17, 2020, 11:35 PM IST

கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனையடுத்து, ​​இந்தியாவிலும் இதேபோன்ற பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சியை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரம் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு, கச்சா எண்ணெயின் விலையில் சிறு உயர்வு ஏற்பட்டதை அடுத்து, கடந்த, ஜூன் ஏழாம் தேதி தொடங்கி, ஒவ்வொரு நாளும், செங்குத்தாக விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் லிட்டருக்கு மொத்தம் 6 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை, நமது பொது அறிவுக்கு எட்டாத வகையிலும், தர்க்கங்களை மீறும் வகையிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகம் நம்பியிருக்கும் நிலை, சர்வதேச அளவிலான பொருள்களின் விலை உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, எண்ணெய் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்படும் மானிய சுமை, எண்ணெய் நிறுவனங்களின் வீழ்ச்சி போன்ற பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், இதனை இன்னும் ஆழமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்
பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்

ரூபாய் - டாலர் மதிப்பீடுகளின் அடிப்படையில் பெட்ரோல் விலை:

முதலாவதாக, கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோலின் விலை குறித்து ஆராயலாம். டெல்லியில் மூன்று காலகட்டத்தைச் சேர்ந்த பெட்ரோலியப் பொருட்களின் விலையை எடுத்துக் கொள்வோம்.

2013ஆம் ஆண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை (159 லிட்டர்) 111.59 டாலராக இருந்தது. ரூபாயின் மதிப்பு, அன்றைய தேதியில் டாலர் ஒன்றுக்கு 66.89 ரூபாயாக இருந்தது. அன்றைய ரூபாய் - டாலர் மதிப்பீட்டின் அடிப்படையில் 46.94 ரூபாய்க்கு இருந்திருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76.06 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதேபோல், கடந்த 2018ஆம் ஆண்டில், கச்சா எண்ணெய் விலை, ரூபாய் - டாலர் மதிப்பீடுகளின் அடிப்படையில், 33.90 ரூபாய் இருந்திருக்க வேண்டிய பெட்ரோல் விலை, 76 ரூபாய்க்கு விற்பனையானது.

சமீபத்திய சந்தை மதிப்பீடுகளின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெயின் விலை 19.90 டாலராகக் குறைந்தது. ரூபாய் - டாலர் மதிப்பீடுகளின் அடிப்படையில், 9.42 ரூபாயாக இருந்திருக்க வேண்டிய பெட்ரோல் விலை, அதே 70 ரூபாய் சொச்சத்திலேயே இருந்தது, தற்போதும் இருக்கிறது. எனவே, கச்சா எண்ணெயின் விலையோ, ரூபாயின் மதிப்போ பெட்ரோல் விலையை தீர்மானிக்கவில்லை.

எண்ணெய்த் துறையில் அரசுக்கு கிடைப்பது இலாபமே:

இரண்டாவது, அரசு அழுத்தமாகக் கூறி வரும், எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் மானியச் சுமை. ஆனால், அரசின் தரவுகளும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுப் பொருள்கள் குறித்த புள்ளிவிவரங்களும் அதன் சொந்த கூற்றையே மறுதலிக்கின்றன.

2017-18ஆம் ஆண்டில் எண்ணெய்த் துறை அரசுக்கு 4,56,530 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்தது. மேலும், 2018-2019ஆம் ஆண்டில் 4,33,062 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தற்காலிக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு இத்துறையில் வருமானம் ஈட்டுகிறது. 2017-18ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கிய மொத்த மானியத் தொகை 2,24,455 கோடி ரூபாய் ஆகும்.

இதில் உணவுக்கான மானியம் - 1,00,282 கோடி ரூபாய், உரங்கள் - 66,468 கோடி ரூபாய், பெட்ரோலியம் - 24,460 கோடி ரூபாய், வட்டி மானியங்கள் - 22,146 கோடி ரூபாய், பிற மானியங்கள் - 11,099 கோடி ரூபாய் ஆகும்.

2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஒதுக்கிய மொத்த மானியத் தொகை 3,38,949 கோடி ரூபாய். இதன் பொருள் அரசாங்கத்தின் முழு மானியச் சுமையையும் பெட்ரோலியத் துறையே ஈடுகட்ட வல்லது என்பதே.

மூன்றாவதாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த கூற்று. சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபம் 69,714 கோடி ரூபாயாக இருந்தது. இது 2017-18இன் போது 69,562 கோடி ரூபாயை விட அதிகமானது. ஓஎன்ஜிசி நிறுவனம் அதிகபட்ச லாபத் தொகையாக 26,716 கோடி ரூபாயையும், ஐஓசிஎல் நிறுவனம் 16,894 கோடி ரூபாயும், பிபிசிஎல் நிறுவனம் 7,132 கோடி ரூபாயும் லாபம் ஈட்டின.

எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்பது ஒரு தவறான கூற்று.

பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா:

நான்காவதாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகம் சார்ந்திருப்பது. இது உண்மையே!

2018-19ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களின்படி, 213.22 மில்லியன் மெட்ரிக் டன்கள் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இதற்கு எதிராக 34.20 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அப்படியெனில், இந்தியாவின் 84 விழுக்காடு கச்சா எண்ணெய் இறக்குமதியையே சார்ந்துள்ளது.

ஆனால், இந்தியா, பெட்ரோலியப் பொருட்களின் துணை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. 2018-19ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களின் துணை உற்பத்திப் பொருட்களான மசகு எண்ணெய் (Petroleum Oil and Lubricants) உள்ளிட்ட, 23,07,663 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில், பெட்ரோலியத் தயாரிப்புகளின் ஏற்றுமதியின் அளவு 11.60 விழுக்காடு ஆகும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இந்திய கச்சா எண்ணெயின் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் காரணமாகக் கூறுவது ஏற்க இயலாததாகிறது.

பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்
பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம்

பலன்களை பகிர்ந்து கொள்ளாத எண்ணெய்த் துறை :

எனவே, எண்ணெய்த் துறை தான் பெறும் பலன்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை. பெட்ரோல், டீசல் விலைகளின் தொடர் ஏற்றம் அடுக்கடுக்காக மோசமான விளைவுகளையே உண்டாக்கும். மேலும் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை, இது மேலும் மேலும் முடக்கும் ஆற்றலையே கொண்டுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பதை நிறுத்துவதற்கும், அதன் மூலம் அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய பிற பொருட்களின் விலை உயர்வையும் மனதில் கொண்டு, அரசாங்கம் அதன் கொந்தளிப்பான பெட்ரோல் விலைக் கொள்கையை ’மறுபரிசீலனை' செய்வதே நன்மை பயக்கும்.

குறிப்பு: இந்தக் கட்டுரை பொருளாதார அறிஞர், டாக்டர் பி.எஸ்.எம்.ராவின் தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்துக்கு ஈடிவி பாரத் நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

இதையும் படிங்க : தனி நபர் நிதி நிர்வாகத்தில் தற்சார்பை உறுதி செய்வது எப்படி? சிறப்புக் கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.