ETV Bharat / business

முடிவுக்கு வந்த அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர்

வாஷிங்டன்: வர்த்தகப் போரை நடத்தி வந்த அமெரிக்கா - சீன ஆகிய நாடுகள் தற்போது தங்களுக்குள் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.

us china first phase trade deal signed, us china trade deal  us china trade war ended, அமெரிக்கா சீன வர்த்தக போர், அமெரிக்க சீன ஒப்பந்தம்
அமெரிக்க சீன ஒப்பந்தம்
author img

By

Published : Jan 16, 2020, 12:28 PM IST

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக வர்த்தக மோதல் இருந்து வந்தது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீனப் பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது.

இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்திருந்தன. இச்சூழலில் அமெரிக்கா, சீனா நாடுகள் இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு!

இதன் மூலம் 2018ஆம் ஆண்டு முதல் வர்த்தகப் போரை நடத்தி வந்த அமெரிக்க - சீன நாடுகள் இன்று முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே தொழிற்முறைப் போட்டிகளைக் களைய உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.