நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிடும் ஜிடிபி புள்ளிவிவரம் குறித்து நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் மிக விரைவாக மீட்சிக் கண்டுள்ளது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் செய்தி எனத் தெரிவித்த அவர், உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சித் தேவையில் முன்னேற்றத்தைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
நாட்டின் ஜிடிபி விவரங்கள் நேற்று வெளியாகின. அதன்படி, கடந்த காலாண்டில் மிக மோசமான வீழ்ச்சியிலிருந்த ஜிடிபி லாக்டவுன் தளர்வுக்குப்பின் சற்று மீட்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக வேளாண் துறை, உற்பத்தித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்டவை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (மார்ச்-ஜூன்) நாட்டின் ஜிடிபி வரலாறுகாணாத வகையில் மைனஸ் 23.9 விழுக்காடு சுருங்கியது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 7.5 விழுக்காடாக குறைந்த பாதிப்பைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு குவியும் அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் மொரீஷியஸ்