டெல்லி : ரெப்போ ரேட் என்ற வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகையால் ரெட்போ வட்டி எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாக தொடர்கிறது.
வட்டி விகிதங்களில் மாற்றம் தொடர்பாக ஒவ்வொரு இரு மாதமும் நிதிக் கொள்கை கூட்டம் டெல்லியில் நடைபெறும். அந்த வகையில் இன்று (அக்.8) நடைபெற்ற கூட்டத்தில் வங்கி வட்டி வீதங்களில் மாற்றம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்த தாஸ், “ரெப்போ வட்டி (4 சதவீதம்), ரிவர்ஸ் ரெப்போ வட்டி (3.5) விகிதங்களில் மாற்றம் இருக்காது.
கோவிட் பரவல் முடக்கத்துக்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் சீராக மீட்கப்பட்டுவருகிறது. வரும் நாள்களில் வளர்ச்சி காரணிகள் வலுப்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பணவீக்க காரணிகளும் சாதகமான உள்ளன என்று தெரிவித்தார். தற்போதுள்ள நிலவரப்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 9.5 சதவீதமாக உள்ளது. முதல் காலாண்டு வளர்ச்சி 17.2 சதவீதமாக உள்ளது.
சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாக உள்ளது. 2022-23ஆம் ஆண்டுகளில் சில்லறை பணவீக்கம் 5.2 விழுக்காடு ஆக இருக்கும். ரெப்போ வட்டி குறைந்தால், அல்லது அதே நிலையில் நீடித்தால் அது வங்கிகளில் கடன் வாங்கியோரை பாதிக்காது. அதாவது ரெப்போ வட்டி குறையும்போது கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.
இதற்கிடையில் வார வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மதியம் 12.45 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை 232.31 புள்ளிகள் உயர்ந்து 59,886.21 புள்ளிகள் என வர்த்தகம் ஆகின. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 54.45 புள்ளிகள் உயர்ந்து 17,844.80 என வர்த்தகம் ஆகிவருகிறது.
இதையும் படிங்க : வங்கிக்கு பணம் எடுத்து செல்லும்போது பாதுகாப்பு இரட்டிப்பு- சைலேந்திர பாபு உத்தரவு