ரிசர்வ் வங்கியின் 584ஆவது கூட்டம் இன்று (ஆக. 14) ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார சூழல், சர்வதேச அளவில் உருவாகியுள்ள பொருளாதார சவால்கள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து 57 ஆயிரத்து 128 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசுக்கு 2019-20 நிதியாண்டு கணக்கில் வழங்க ரிசர்வ் வங்கி முடிவெடுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு சுமார் 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருந்தது.
மேலும், இந்தக் கூட்டத்தில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்த ஆண்டு இந்தளவு பொருளாதர சரிவு நிச்சயம் - பொருளாதார வல்லுநர் உறுதி