ETV Bharat / business

'வங்கிகளின் வாராக்கடன் சிக்கல்' குறித்து புத்தகம் எழுதும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்!

மும்பை: இந்தியா வங்கிகளில் நிலவும் வாராக்கடன் சிக்கல் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் பட்டேல் புத்தகம் எழுதுகிறார்.

Urjit
Urjit
author img

By

Published : Jul 6, 2020, 6:07 PM IST

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து தனது பதவிக்காலம் முடியும் முன்னரே யாரும் எதிர்பாராதவிதமாக ராஜிநாமா செய்தவர் உர்ஜித் பட்டேல். அரசுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே உர்ஜித் பட்டேல் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் இந்திய வங்கிகளில் உள்ள வாராக்கடன் சிக்கல் குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுதிவருகிறார்.

'Overdraft:Saving the Indian Saver' என்ற பெயரில் வெளியாகும் இந்தப் புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. பொருளாதாரத் துறையில் 30 ஆண்டு காலம் அனுபவமிக்க உர்ஜித் பட்டேல் வாராக்கடன் சிக்கலலிருந்து வங்கிகளை மீட்கும் வழிமுறைகளையும், வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

உர்ஜித் பட்டேல் வாராக்கடன் விவகாரத்தில் மிக கரராக செயல்பட்டார் என வங்கித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உர்ஜித் பட்டேலின் இந்தப் புத்தகம் இம்மாத இறுதியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிஜிட்டலில் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? - சைபர் காப்பீடு பெறுவது எப்படினு தெரிஞ்சுக்கோங்க?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.