ETV Bharat / business

வரும் மார்ச் மாதத்திற்குள் இலக்கை எட்ட வேண்டும் - பொதுத்துறை நிறுவனங்களை அறிவுறுத்திய நிதியமைச்சர் - மத்திய நிதியமைச்சர் அரசு செலவீனம்

2020-21ஆம் ஆண்டில் அரசின் செலவீன இலக்கை அடைய பொதுத்துறை நிறுவனங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
author img

By

Published : Nov 27, 2020, 7:58 PM IST

நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவருவதால், அதை மீட்டெடுக்கும் விதமாக அரசு செலவீனங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்தை நடத்தினார்.

மின்சாரம், கணிமம், அனுசக்தி உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர், நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு அரசு செலவீனம் என்பது முக்கிய பங்களிப்பாகும். எனவே, நிறுவனங்கள் இந்த பாதையில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டால் கோவிட்-19 தாக்கத்திலிருந்து விரைவான மீட்சியை கானாலம் என்றார்.

மூன்றாவது காலாண்டு இறுதிக்குள் 75 விழுக்காடு இலக்கையும், நான்காவது காலாண்டு இறுதிக்குள் 100 விழுக்காடுக்கும் மேலான இலக்கையும் எட்ட நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும் என நிதியமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

2020-21ஆம் ஆண்டுக்கான செலவீன இலக்கு ரூ.61,483 கோடியாக உள்ள நிலையில், நவம்பர் 23, 2020 தேதி வரை ரூ.24,227(39.4%) மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளாக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க: நாட்டின் 2ஆவது காலாண்டிலும் தொடர் 'நெகட்டிவ்' வளர்ச்சியில் ஜி.டி.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.