ETV Bharat / business

'இனி விவசாயக் கடன் தள்ளுபடி தேவையில்லை..!' - எஸ்பிஐ வங்கி தலைவர்

"இனி விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தலாம்" என, எஸ்பிஐ வங்கித் தலைவர் ராஜ்னீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி தலைவர்
author img

By

Published : Feb 5, 2019, 7:41 PM IST

எஸ்பிஐ வங்கி சார்பில், 'யோனோ 20 அண்டர் 20' என்ற பெயரில் அறிவியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த வங்கியின் தலைவர் ராஜ்னீஸ் குமார், எஸ்பிஐ சார்பில் வழங்கப்படும் 59 நிமிடக் கடனில், தினமும் 50 கடன் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பற்ற சர்வர்கள் மூலம் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அதற்கு ராஜ்னீஸ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாகவே உள்ளது என அவர் உறுதியளித்துள்ளார்.

'இனி விவசாயக் கடன் தேவையில்லை!'

இனி வரும் காலத்தில் விவசாயிகளகுக்கு கடன் தள்ளுபடிக்கு பதிலாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ராஜ்னீஸ் குமார் தெரிவித்துள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடியைவிட இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், கடன் தள்ளுபடி மற்றும் நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் என இரண்டையும் அரசால் செயல்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகள் இணைந்து முயற்சி செய்தால் விவசாயிகளுக்கு நிலையான வருமான கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Intro:Body:

http://www.eenaduindia.com/news/business-news/2019/02/05141440/50-loans-approved-everyday-under-59-minute-loan-Scheme.vpf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.