கரோனாவால் இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டுள்ளது. இந்தாண்டு மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.1 விழுக்காடு வளரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இந்நிலையில் மோதிலால் ஓஸ்வால் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், "இந்தாண்டில் முதல் முறையாக இம்மாதம் வேளாண் தொடர்பில்லாத செயல்பாடுகள் (தொழில்துறை மற்றும் சேவை துறை) வேளாண் துறையைவிட வேகமாக வளர்ந்துள்ளது.
தனிநபர் நுகர்வு செலவினம் (பி.சி.இ.) தொடர்ந்து ஏழாவது மாதமாக இரட்டை இலக்கங்களில் சுருங்கிக் கொண்டிருந்தாலும், மொத்த முதலீடுகள் ஐந்து விழுக்காடு மட்டுமே குறைந்துள்ளது. இது கடந்த எட்டு மாதங்களிலேயே மிக குறைவான வீழ்ச்சியாகும்.
இந்தாண்டு நம்பர் மாதத்திற்கான மின் உற்பத்தி, தொழில்துறை, உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது பொருளாதாரம் மிக விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்றே தெரிகிறது.
எங்கள் கணிப்பின்படி அக்டோபர் மாதம் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இருப்பினும், வரும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி மிதமாகவே இருக்கும். இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரியும். அதன் பின்னரே மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். இருப்பினும், கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பொருளாதார பாதிப்புகள் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் 10 விழுக்காடு சரியும்' - அபிஜித் சென்