ETV Bharat / business

’நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் என்பதுதான் இன்றைய முட்டாள்கள் தினத்தின் மிகப்பெரும் காமெடி’

author img

By

Published : Apr 1, 2021, 10:48 AM IST

Updated : Apr 1, 2021, 11:32 AM IST

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதக் குறைப்பை திரும்பப் பெறுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் இது குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று (மார்ச்.31) அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஏப்.01) அறிவித்துள்ளார். மேலும், 2020-2021 கடைசி காலாண்டில் ஏற்கெனவே இருந்த வட்டி விகிதமே மீண்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், ”சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து, லாபம் ஈட்டுவதன் மூலம் நடுத்தர வர்க்கத்தின் மீது மற்றொரு தாக்குதலை நடத்த பாஜக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் கையும் களவுமாக பிடிபடும்போது "இது கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை என நொண்டி சாக்கு சொல்லி நிதி அமைச்சர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்” என சாடியுள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்
ப.சிதம்பரம் ட்வீட்

முன்னதாக நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ”அடுத்த காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அறிவிப்பது ஒரு வழக்கமான பயிற்சி. மார்ச் 31 அன்று வெளியான அறிவிப்பு எப்படி கவனக்குறைவாக இருக்க முடியும்?” எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணவீக்கம் ஆறு விழுக்காடைத் தாண்டி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் இந்த நிலையில், ​​பாஜக அரசு ஆறு விழுக்காட்டிற்கும் குறைவான வட்டி விகிதங்களை அறிவித்து சேமிப்பாளர்களையும் நடுத்தர வர்க்கத்தினரையும் தாக்கி வருகிறது என்றும் அவர் சாடியுள்ளார்.

ப.சிதம்பரம் ட்வீட்
ப.சிதம்பரம் ட்வீட்

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, ”இன்றைய முட்டாள்கள் தினத்தில் எது மிகப் பெரிய நகைச்சுவை?

மேற்பார்வை மட்டுமே பார்த்து வழங்கப்பட்ட நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பா அல்லது நிர்மலா சீதாராமன் தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் என்பதா?” என சாடியுள்ளார்.

மஹுவா மொய்த்ரா ட்வீட்
மஹுவா மொய்த்ரா ட்வீட்

இதையும் படிங்க: சிறு சேமிப்புத் திட்ட வட்டிக் குறைப்பு அறிவிப்பு வாபஸ்

Last Updated : Apr 1, 2021, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.