அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில், கடந்த மாதம் 25ஆம் தேதி கறுப்பினரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல் துறையின் பிடியில் கொல்லப்பட்டார்.
இவர் அநியாயமாக கொல்லப்பட்டார் என்றும்; இவரது மரணத்திற்கு நீதி கேட்டு கறுப்பின மக்கள் ஆவேசமாகப் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டங்களின்போது காவல் துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் மோதல்கள் வெடித்தன. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை முன்பும் அடுத்தடுத்து வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன.
தலைவர்களின் சிலைகள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எந்த ஒரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தினாலோ, சேதப்படுத்த முயற்சித்தாலோ அபராதம் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்
இது தொடர்பாக மற்றொரு அறிக்கையை தற்போது அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதில் வன்முறையைத் தூண்டும் அனைத்து பதிவுகளையும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும் எனவும்; இனி இப்படி ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வரக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில், மரித்துப் போன மனிதநேயம், முதியவரின் உடல் ஜேசிபி மூலம் அகற்றம்!