உலகளவில் பிரபலமான உபேர் நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக வாடகை ஆட்டோ சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் ஆட்டோ சேவையை பயனர்கள் உபேர் செயலி மூலமாக புக் செய்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் ரைடர்ஸ் ஆட்டோவை பல மணி நேரத்திற்கு சேர்த்து புக்கிங் செய்துக்கொள்ளலாம்.
பல வகையான தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக ஒரு மணி நேரம்/10 கிலோ மீட்டர் தொகுப்புக்கு 169 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 8 மணி நேர தொகுப்பு வரை புக்கிங் செய்துக்கொள்ளலாம்.
இந்த சேவை பெங்களூருவில் தொடங்கிவிட்டது. மேலும், டெல்லி என்.சி.ஆர், மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் புனேவிலும் அறிமுகமாகியுள்ளது.
இது குறித்து உபெர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் சந்தை மற்றும் வகைகளின் தலைவர் நிதீஷ் பூஷண் கூறுகையில், " இது இந்தியாவின் முதல் கண்டுபிடிப்பு. ரைடர்ஸ் மற்றும் டிரைவர்கள் இருவருக்கும் பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" எனத் தெரிவித்தார்.