இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் 13 சதவீதமும், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் பங்குகள் 9.3 சதவீதம் வரை உயர்வைக் கண்டன. தேசிய பங்குச்சந்தையில் டாடா நிறுவனப் பங்குகள் ரூ.142.55க்கு வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையில் ரூ.108.60க்கு மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் பங்குகள் விற்பனையானது.
இங்கிலாந்தின் மிகப்பெரிய நிறுவனமான ஜாகுவர் லேண்ட் ரோவர் நிறுவனத்துடன், டாடா கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படததால், அந்நாட்டில் இரு பிரதமர்கள் பதவியிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “பழைய நிலைக்கு திரும்ப இந்த ஒப்பந்தம் உதவும்” என்றார்.
இதையும் படிங்க: இரு பிரதமர்களைக் காவு வாங்கிய #Brexit-ல் உடன்பாடு