ETV Bharat / business

எங்கள் தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன - ஒன் பிளஸ் - One plus latest news

டெல்லி : சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாக ஒன் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Navnit Nakra, Oneplus
Navnit Nakra
author img

By

Published : Jul 3, 2020, 7:20 PM IST

இந்திய - சீன ராணுவத்தினரிடையே கடந்த மாதம் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய U மற்றும் Y சீரிஸ் டிவிகளை நேற்று வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமை வியூக அலுவலருமான நவ்னித் நக்ரா, "2014ஆம் ஆண்டு நாங்கள் எங்கள் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டதில் இருந்து இந்தியா ஒன்பிளஸின் முக்கிய சந்தையாக இருக்கிறது.

மேலும், எங்கள் தயாரிப்புகளை 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். இந்நிலையில், தற்போது ஒன்பிளஸ் டிவிக்கள் அனைத்தையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவுள்ளோம். மேலும், கடந்த ஆண்டு எங்கள் R&D மையத்தை ஹைதராபாத்தில் தொடங்கினோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளோம்.

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் நீண்டகால வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக உள்ளது. இங்கு எங்கள் இருப்பை வலுப்படுத்தவும், பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

மேலும், ஆஃப்லைன் சேல்ஸ் எனப்படும் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் தயாரிப்புகளின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக, இந்தியா முழுவதும் ஐந்தாயிரம் கடைகளுடன் ஒன்பிளஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்டெல் முதலீடு: அம்பானி காட்டில் மழை; ஜியோ தளத்தில் குவியும் முதலீடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.