பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ஊழியர்கள் சுமார் 54 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப்போவதாகவும், அத்துடன் ஓய்வு வயதை 60இல் இருந்து 58ஆக குறைக்க உள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வெகுவாக கிளம்பின. பொதுத்துறை நிறுவனங்களைத் தாரைவார்க்கும் திட்டங்களை வேகமாக மத்திய அரசு மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீ வத்சவா தனது ட்விட்டர் பக்கத்தில் ஊழியர்களின் ஓய்வு வயதைக் குறைப்பது, ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது போன்ற எண்ணம் நிர்வாகத்திற்கு இல்லை.
ஊடகங்களில் வெளியாகும் இதுபோன்ற தகவல்களை பிஎஸ்என்எல் மறுக்கிறது. 4ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு மற்றும் ஊழியர்களின் கோரிக்கைப்படி விருப்ப ஓய்வு திட்டங்கள் போன்ற அம்சங்களைத் தொலைத்தொடர்புத் துறை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.