புதுச்சேரி பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில், செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செப்.3) இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், ராஜா தியேட்டர் சிக்னல் அருகே சட்டக் கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பு மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தினார்கள்.
இதில் இந்திய மாணவர் சங்கம் மாநில குழு உறுப்பினர் செம்மலர், செயற்குழு உறுப்பினர் மணியன் உள்பட ஏராளமான சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் நாராயணசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.