ETV Bharat / business

நெருக்கடியில் வோடபோன் ஐடியா: பங்குகளை விற்க தயாராகும் கே.எம். பிர்லா! - பி எஸ் என் எல்

ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர் குமார் மங்களம் பிர்லா அமைச்சரவைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தன்னிடம் உள்ள வோடபோன் ஐடியா பங்குகளை அரசுக்கு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா
author img

By

Published : Aug 4, 2021, 3:42 PM IST

டெல்லி: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 27 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர் குமார் மங்களம் பிர்லா அமைச்சரவைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தன்னிடம் உள்ள வோடபோன் ஐடியா பங்குகளை, அரசுக்கோ அல்லது நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு தகுதியானதாக அரசு கருதும் வேறு எந்த நிறுவனத்துக்கோ ஒப்படைக்க தயார் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்பு உரிமத்துக்கான கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக்கான கட்டணம் என, மொத்தம், 58 ஆயிரத்து 254 கோடி ரூபாயை, வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டும். இதில், 7,854 கோடி ரூபாயை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், மீதி 50 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் பாக்கியுள்ளது.

வரி பாக்கி குறித்த அரசின் கணக்கீட்டை சரிசெய்ய வேண்டும் எனக் கோரி, இந்நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துடன், உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், இவற்றின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆதித்யா பிர்லா தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 27 விழுக்காடு பங்குகள் தன்னிடம் இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மொத்தம், 27 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனத்தின் தன்னுடைய பங்குகளை அரசு, பொதுத்துறை, உள்நாட்டு நிதி நிறுவனம் அல்லது அரசு விரும்பும் எந்த நிறுவனத்திற்கும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்பட்டதாக தெரியவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.