இன்ஃபோசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது தடத்தை அழுத்தமாகப் பதிக்கும் முயற்சியை தற்போது மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய பகுதியாக அந்நாட்டில் 12 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் நிலையில், அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 12 ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரம் அமெரிக்கர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் புதிதாக சேர்த்துள்ளது. அந்நாட்டின் இந்தியனா, நார்த் கரோலினா, ரோட் தீவுகள், டெக்சாஸ், அரிசோனா ஆகிய பகுதிகளில் புதிய தொழில்நுட்ப மையங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை போலவே ஆஸ்திரேலியா பொருளாதாரமும் கடும் வீழ்ச்சி!