பயணிகள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இரு இருக்கைகளை தங்களின் இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள முடியும் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு பயணச்சீட்டு மதிப்பில் இருந்து 25 விழுக்காடு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. மேலும் இதனை தங்களின் பயணச்சீட்டு விற்பனை முகவர்கள், இண்டிகோ அலுவலகம் என எங்கும் பெற முடியாது என்றும் இண்டிகோ இணையதளத்தில் மூலமாக கைப்பேசி செயலியின் மூலமாகவோதான் இப்பதிவை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: '68% பயணிகள் விமானப் பயணத்தையே பாதுகாப்பாக கருதுகின்றனர்' - ஆய்வில் தகவல்
ஜூலை 24ஆம் தேதி முதல் இந்த பதிவுகள் பயணிகளுக்காக இணையதளத்தில் திறக்கப்படவுள்ளது. முன்னதாக இண்டிகோ நடத்திய ஆய்வில், குறிப்பிட்ட சில பயணிகள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விமானத்தில் பயணம் செய்யாமல் இருந்து வருகின்றனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.