நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெச்.டி.எஃப்.சி வங்கிகளுக்கு 4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் சுகாதாரத்திற்குப் பயனளிக்கும் விதத்தில் புதிய திட்டம் ஒன்றை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்துள்ளது. முன்னணி காப்பீட்டு நிறுவனமான மேக்ஸ் புபா நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளைகளில் Any Time Health (ATH) என்ற உடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் டிஜிடல் இயந்திர சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் பெறலாம்.
இது குறித்துப் பேசிய ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமை அலுவலர் அரவிந்த் வோஹ்ரா, 'உடல்நலம் நாட்டின் பிரதானமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. குறிப்பாக தீவிர வியாதிகளுக்கான செலவீனங்கள் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ள நிலையில், நாட்டின் 20 சதவிகித மக்களே காப்பீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
மேலும், வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த டிஜிட்டல் ஏ.டி.ஹெச் சேவையை உருவாக்கப்பட்டுள்ளது எனவும், 4 கோடி வாடிக்கையாளர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிமுக விழாவில் மேக்ஸ் புபா காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆஷிஷ் மெஹ்ரோத்ரா மற்றும் நடிகை அதிதி கோவித்ரிகார் ஆகியோர் உடனிருந்தனர்.